இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள பார்மர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திவரும் ஒட்டகம் ஒன்று, அங்கிருந்த ராணுவ வீரர் அமித் என்பவரை பலமாகத் தாக்கியுள்ளது.
இதனைப் பார்த்த சக வீரர்கள், அவரைக் காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், முதுகு, கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வீரரைத் தாக்கிய ஒட்டகத்தை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ரோந்துப் பணியிலிருக்கும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி ராணுவம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ராபிக்கை ஸ்தம்பிக்க செய்த புலி... குட்டிகளுடன் கம்பீர வாக்!