ETV Bharat / bharat

"புதிய இந்தியாவின் தந்தை என்று கூறுவது மோடிக்கு தான் அவமானம்" - சஞ்சய் ராவத்! - அம்ருதா பட்னாவிஸ் குறித்து சஞ்சய் ராவத்

பிரதமர் மோடியை தேசத்தந்தை என்று கூறிய அம்ருதா ஃபட்னாவிஸின் கருத்தை சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்று கூறுவது அவருக்கு தான் அவமானம் என்றும் குறிப்பிட்டார்.

Calling
Calling
author img

By

Published : Dec 25, 2022, 4:25 PM IST

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், பிரதமர் மோடியை தேசப்பிதா என்று கூறினார். மகாத்மா காந்தி முந்தைய காலத்தின் தேசத்தின் தந்தை என்றும், பிரதமர் மோடி நவீன இந்தியாவின் தேசத்தந்தை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அம்ருதா ஃபட்னாவிஸின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்டப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்று கூறுவது மோடிக்கு தான் அவமானம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், "பாஜகவினர் இந்தியாவை பழைய இந்தியா என்றும் புதிய இந்தியா என்றும் பிரித்துவிட்டனர். பழைய இந்தியாவுக்கு தேசத் தந்தை மகாத்மா காந்தி என்றும், புதிய இந்தியாவின் தந்தை மோடி என்றும் கூறுகிறார்கள். தற்போது புதிய இந்தியாவில், பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பயங்கரவாதம் போன்ற பேய்கள் தலைதூக்கி ஆடுகின்றன. இந்த புதிய இந்தியாவுக்கு மோடியை தந்தை ஆக்குவது, அவருக்குதான் அவமானம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற வீர் சாவர்க்கரை தேசத்தந்தை என்று பாஜகவினர் யாரும் பேசுவதில்லை. அதேபோல், சாவர்க்கரை ஆர்எஸ்எஸ் எப்போதும் எதிர்த்தது. அப்படியென்றால் பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்திற்கு பாஜக மரியாதை கொடுக்கவில்லையா?

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் இந்திய மக்களால் வழங்கப்பட்டது. இதற்கு சிவசேனா நிறுவனரான மறைந்த பால் தாக்கரே உள்ளிட்டப் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இப்போது தேசத்தின் தந்தை யார்? அல்லது தலைவர் யார்? என்பது பிரச்னை இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்களிப்பு என்ன? என்பதுதான் விஷயம்.

சுதந்திரப் போராட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எந்தப் பங்கும் இல்லை. எனவே, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற காங்கிரஸுடன் தொடர்புள்ள தலைவர்களை அவர்கள் களவாட வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொரோனா பரவல் அதிகரிப்பு; மக்கள் விழிப்புடன் இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.