பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2022-23 ராபி பருவப் பயிர்களுக்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதிகபட்சமாக பருப்பு (மைசூர்), கடுகு ஆகியவற்றின் அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டுள்ளது. குங்குமப்பூவுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.114 உயர்த்தப்பட்டுள்ளது. பார்லிக்கான அடிப்படை ஆதார விலை 60 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த, ரூ.11,040 கோடியில் தேசிய பாமாயில் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது.
பயிர் பல்வகைப்படுத்துதல் திட்டத்தை ஊக்குவித்து, சாகுபடியை மேம்படுத்தி விவசாயிகளின் வருவாயைப் பெருக்க அரசு ஒருங்கிணைந்த திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அமைச்சரவை கூட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலுக்குத் தயாராகும் பாஜக: 5 மாநில பொறுப்பாளர்கள் நியமனம்