கண்ணுஜ்: ராஜஸ்தானில் இருந்து பீகாருக்கு 100 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. காதிச்சா கிராமம் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் டயர் வெடித்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மாற்றுப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு எஞ்சியவர்கள் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: குருகிராம் மயானத்தில் இடமில்லை: கார் பார்கிங்கில் இறுதிச்சடங்கு