உத்தரகாண்ட்: மத்தியப்பிரதேசம், பன்னா மாவட்டத்திலிருந்து உத்தராகண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரை செல்லும் 28 பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. உத்தரகாண்ட் மாநிலம், யமுனோத்ரி நெடுஞ்சாலையில் இன்று (ஜூன் 5) பேருந்து சென்று கொண்டிருந்தபோது ’டம்டா’ என்ற இடத்திற்கு அருகே திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்த காவல் துறையினர், மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் தற்போது வரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டிஜிபி அசோக்குமார் தெரிவித்தார். அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேர்: அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி