ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில் மகேஷ்பூர் பகுதியில் ஜெயின் யாத்ரீகர்கள் (Jain pilgrims) சென்ற பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குளானது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் சடலங்கள் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஓட்டுநர் வழித்தவறி மகேஷ்பூர் நோக்கி பேருந்தை இயக்கியபோது, பேருந்தின் மேற்பகுதி மின் வயரில் உரசி தீப்பிடித்ததாகவும், இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்ததும் தெரியவந்தது. இந்த கோர விபத்து குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.