இது குறித்து டெல்லியின் வடக்கு ரோகிணி காவல் துறையினர் கூறுகையில், "வடக்கு ரோகிணியின் நஹர்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (ஏப்.1) தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு விரைந்த காவலர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்" என்றனர்.
முதல்கட்டத் தகவலில், ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவி, இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், நேற்றிரவு வீட்டில் தகராறு ஏற்பட்டிருந்ததும் தெரியவருகிறது.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கச் சொல்லி கணவன் துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை!