2022 2023ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப். 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி உள்ளிட்ட ஐந்து நதிகள் இணைப்புக்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உரிய பேச்சுவார்த்தை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின் திட்டப் பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மத்திய பிரதேசம்-உத்தரப் பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே நிறைவேற்றப்பட்ட கேன்-பெட்வா நதி நீர் இணைப்பு திட்டத்தில் சுமார் ஒன்பது லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் பயன்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: Budget 2022 LIVE Updates: பெண்ணாறு காவிரி இணைப்பு- நிர்மலா சீதாராமன் தகவல்