புத்தர் ஞானம் பெற்ற தினம் புத்த பூர்ணிமாவாக இன்று(மே 26) அனுசரிக்கப்படுகிறது. திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமா புத்த பூர்ணிமா தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது, "புத்தருக்குப் பின் உலகம் பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. 2,600 ஆண்டுகள் தாண்டியும் புத்தனின் போதனைகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.
புத்தர் உரைத்த ஞானத்தை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அவை எளிமையானவை.
நான் குழந்தைப் பருவத்தில் புத்தரை கற்க ஆரம்பித்தேன். தற்போது எனக்கு 86 வயது ஆகிறது. இருப்பினும் தொடர்ந்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.
எனவே, 21ஆம் ஆண்டில் புத்தரை கற்பவர்கள் தற்காலத்திற்கு ஏற்ப, அதை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். புத்தரின் எளிமையான ஆலோசனை என்பது பிறரை துன்புறுத்தாமல் இயன்றவரை அவருக்கு நன்மை பயப்பதே. இன்றைய கரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் விடுபட புத்தரை பிரார்த்திப்போம்" என்றுள்ளார்.
இதையும் படிங்க: புத்த பூர்ணிமா நாளின் சிறப்பு என்ன?