ஜெய்சால்மர் (ராஜஸ்தான்): உலக முழுவதும் இன்று (ஜுன் 21) ஏழாம் ஆண்டு சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறுது. இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையான தார் பாலைவனத்தில் முகாமிட்டுள்ள எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த இந்திய ராணுவ வீராங்கணைகள் யோகா, பிராணாயாமம் செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அமைதிக்கு வழி யோகா
கடுமையான வெயிலில், ராணுவ வீராங்கணைகள் யோகாவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
யோகா செய்வதன் மூலம் உடல், மனம் ஆகிய இரண்டும் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் இருக்கும் என்பதை எல்லை பாதுகாப்பு படையினர் இதில் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள ஷாகர் கோட்டையின் அடிவாரத்தில் எல்லை பாதுகாப்பு படையின் மற்றொரு முகாமைச் சேர்ந்த வீரர்களும் தாங்கள் யோகா செய்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
இதையும் பாருங்க: உறை பனியிலும் உயிர் காக்கும் ராணுவ வீரர்களின் யோகாசன புகைப்படத்தொகுப்பு