அமிர்தசரஸ் (பஞ்சாப்): பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸை ஒட்டி உள்ள சர்வதேச எல்லையில், பறந்த பாகிஸ்தான் நாட்டின் ட்ரோனை எல்லை பாதுகாப்புப் படையினர், சுட்டு வீழ்த்தியதாக, BSF அதிகாரி தெரிவித்து உள்ளார். அந்த ட்ரோனில், 2 பாக்கெட் ஹெராயின் போன்ற போதைப்பொருள்கள் இருந்ததாக, அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
“பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே, எல்லை பாதுகாப்புப் படையின் 144 பிரிவினர், BOP Rajatal பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அப்பகுதியில் பறந்த போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) சுட்டு வீழ்த்தினர். அந்த ட்ரோனில் இருந்து, ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 2 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக,” அமிர்தசரஸ் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி அஜய் குமார் மிஸ்ரா கூறி உள்ளார்.
இதையும் படிங்க: ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம்! வழிமுறைகள் என்னென்ன?
இதுதொடர்பாக, எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, ’’முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள தானோ கலான் கிராமத்தில் சனிக்கிழமை இரவு 8.48 மணியளவில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் என்று சந்தேகிக்கப்படும் மர்ம வாகனம் பறப்பது கண்டறியப்பட்டது. "எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக, அந்த ட்ரோனை இடைமறிக்கத் தொடங்கினர். பின்னர், இதனை, BSF படைவீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.
’’அந்த ட்ரோன், தானோ காலன் கிராமத்தின் வயல்வெளி பகுதிகளில் விழுந்தது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டத் தேடுதலின் போது, விவசாய நிலத்தில் இருந்து ட்ரோனுடன் இணைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான மூன்று போதைப் பொருள்கள் அடங்கிய ஒரு "ட்ரோன் (குவாட்காப்டர், டிஜேஐ மெட்ரிஸ், 300 ஆர்டிகே) ஆகியவற்றை எல்லை பாதுகாப்புப் படையினர் மீட்டதாக", அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஆர்.ஆர்.ஆர் படத்தின் வில்லன் சர் ஸ்காட் உயிரிழந்தார்!
பிடிபட்ட போதைப்பொருளின் எடை 3.3 கிலோகிராம் எனவும், கடத்தல்காரர்களை எளிதில் கண்டறிவதற்காக, நான்கு ஒளிரும் பட்டைகள் சரக்குகளுடன் இணைக்கப்பட்டதாக BSF தெரிவித்து உள்ளது. இதனை அடுத்து, உஷாரான எல்லை பாதுகாப்புப் படை துருப்புகளால், பாகிஸ்தானின், மற்றொரு மோசடி முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளதாக, குறிப்பிட்டு உள்ள எல்லை பாதுகாப்புப் படையினர், 3.323 கிலோ மீட்டர் தொலைவிலான இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்க, கட்டாயப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.