ETV Bharat / bharat

பஞ்சாப் எல்லையில் குவியும் பாகிஸ்தான் ஹெராயின் டிரோன்கள் - பாகிஸ்தான் ஹெராயின் டிரோன்கள்

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைக்குள் ஹெராயின் போதைப்பொருள் உடன் நுழைந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் எல்லையில் குவியும் பாகிஸ்தான் டிரோன்கள்

author img

By

Published : Dec 6, 2022, 3:55 PM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் டிரோன்கள் நுழைவது அதிகரித்துவருகிறது. இந்த டிரோன்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களும், மாவட்ட போலீசாரும் இணைந்து சுட்டுவீழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், டிசம்பர் 3ஆம் தேதி பாகிஸ்தான் டிரோன் சுட்டுவீழ்த்தப்பட்டு, 5 ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்பின் வால்டோஹா பகுதியில் டிசம்பர் 3ஆம் மற்றொரு பாக். டிரோன் வீழ்த்தப்பட்டு, 3 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) டர்ன் தரனில் உள்ள கலியா கிராமத்திற்குள் நுழைந்த 3ஆவது டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதிலிருந்து 2.47 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக, நவம்பர் 28ஆம் தேதி அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் 2 டிரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதும், 10 கிலோ ஹெராயின் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய - நேபாள எல்லையில் கல் வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.