ETV Bharat / bharat

Telangana Election 2023: சூடுபிடிக்கும் தெலங்கானா தேர்தல் களம்! மும்முரம் காட்டும் கே.சி.ஆர்.! திட்டம் என்ன?

Telangana BRS party election manifesto : தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மாநிலத்தை ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி வெளியிட்டு உள்ளது.

KCR
KCR
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 6:11 PM IST

ஐதராபாத் : தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பு மனு படிவத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வழங்கினார்.

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டம்னற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாநிலத்தை ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சித் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் 115 இடங்களுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வேட்பாளர்கள் படிவத்தை வழங்கினார்.

கே.சி.ஆர் மகன் கே.டி.ராமா ராவ், தெலங்கானா சட்டசபை சபாநாயகர் போச்சாராம் ஸ்ரீநிவாஸ் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு வேட்புமனு படிவத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வழங்கினார். இதனிடையே பி.ஆர்.ஆஸ் கட்சியின் தரப்பில் இருந்து தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன.

விவசாயிகளுக்கான முதலிட்டு திட்டமான ரிது பந்து உதவித் தொகை திட்டத்தில் வழங்கும் தொகையை உயர்த்துவது, பெண்களுக்கு 400 ரூபாயில் சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், மாதந்தோறும் 2 ஆயிரத்து 16 ரூபாயாக வழங்கப்படும் சமுதாய பாதுகாப்பு பென்சன் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டு 3 ஆயிரத்து 16 ஆயிரம் ரூபாயாகவும் படிப்படியாக அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 5 ஆயிரம் ரூபாயாக அது உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஊனமுற்றோருக்கான உதவித் தொகை 6 ஆயிரத்து 16 ரூபாயாக உயர்த்தப்படும், ரிது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு 400 ரூபாயில் சிலிண்டனர் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆரோக்ய ஸ்ரீ திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அனைவருக்கும் ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பில் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் ஆரோக்ய ஸ்ரீ திட்டத்தில் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐசிசி போட்டியா..? இல்ல பிசிசிஐ போட்டியா? - பாக். அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் அதிருப்தி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.