ETV Bharat / bharat

மாலை மாற்றும் போது மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு - திருமணத்தில் மணப்பெண் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மாலை மாற்றும் போது மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

Bride collapses during garland exchange, dies on stage in Lucknow

author img

By

Published : Dec 4, 2022, 4:46 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மாலை மாற்றும் போது மணப்பெண் மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து மணமேடையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் லக்னோவில் உள்ள மலிஹாபாத் பத்வானா கிராமத்தில் இன்று (டிசம்பர் 4) நடந்துள்ளது.

இதுகுறித்து மலிஹாபாத் போலீசார் கூறுகையில், "மலிஹாபாத் பகுதியின் பத்வானா கிராமத்தில் வசிக்கும் ராஜ்பால் என்பவரின் மகள் ஷிவாங்கிக்கு விவேக் என்பவருடன் திருமணம் நடைபெறவிருந்தது. அப்போது, மணப்பெண் மணமகனுக்கு மாலை அணிவித்த அடுத்த கணம் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து குடும்பத்தார் மணப்பெண்ணை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதோடு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர். அவரது உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளோம்" எனத் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மனைவி மீது சந்தேகம்.. தந்தையை கொலை செய்த மகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.