ETV Bharat / bharat

போதை ஏறிப்போச்சு..! - திருமணம் நின்னு போச்சு..!- உ.பி.யில் மணமகன் அட்டகாசம்! - மணமகன் மதுபோதையில் இருந்ததால் திருமணம் நிறுத்தம்

உத்தரபிரதேசத்தில் மது போதையில் மணமகன் அட்டகாசம் தாங்க முடியாமல் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

Uttar Pradesh
Uttar Pradesh
author img

By

Published : May 6, 2023, 9:04 PM IST

சந்தோலி : மதுபோதையில் முகம் முழுவதும் மணமகன் குங்குமத்தை பூசியதாக கூறி மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.

வடமாநிலங்களில் திருமண விழாவின் போது கலாட்டா நடைபெறுவது சமீபகாலமாக வழக்கமாகி வருகிறது. திருமணத்தையும் மறந்து குடிபோதையில் வரும் மணமகன்களை, பெண் வீட்டார் மற்றும் மணமகள் உள்ளிட்டோர் வறுத்தெடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது டிரெண்டாகி வருகின்றன.

வெற்றிலையுடன் பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருளை கலந்து வாயில் குதப்பியவாறு மணமேடையில் அமர்ந்து கொண்டு இருந்த மணமகனை அடித்து விரட்டி வாயில் இருப்பதை துப்பிவிட்டு வருமாறு மணமகள் மிரட்டிய வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.

அதேநேரம் மணமேடையில் அமர்ந்து திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகன் படிக்கவில்லை என்று அறிந்து திருமணத்தை நிறுத்திய மணமகள்களும் உண்டு. அதுபோன்ற செய்திகளும் அண்மைக் காலங்களில் வெளியாகி பெண் விழிப்புணர்வுகளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.

இந்நிலையில், அது போன்றதொரு சம்பவம் தற்போது உத்தரபிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டம் மனிக்பூர் கிராமத்தை சேர்ந்த வரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. திருமணத்திற்கு வந்த மணமகள் வீட்டாரை மணமகன் வீட்டார் உற்சாக வரவேற்று இரவு விருந்து அளித்து உள்ளனர்.

இரவு விருந்து முடிந்து சடங்கு சம்பிரதாயங்கள் தொடங்கிய நிலையில், மணமகனை மணமேடைக்கு வருமாறு மதகுரு அழைத்து உள்ளார். மணமேடைக்கு தள்ளாடியபடியே மணமகன் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சடங்குகள் நிறைவுபெற்றதை அடுத்து மணமகள் மேடைக்கு அழைக்கப்பட்டு உள்ளார்.

இருவரும் ஒன்றாக அமர்ந்த நிலையில் மணமகள் நெற்றியில் குங்குமத்தை வைக்குமாறு மதகுரு அறிவுறுத்தி உள்ளார். மதுபோதையில் இருந்த மணமகன், மணமகளின் நெற்றிக்கு பதிலாக முகம் முழுவதும் குங்குமத்தை பூசியதாக கூறப்படுகிறது. மேலும் இதை தடுக்க முயன்ற மணமகளையும் அவர் அடித்து துன்புறுத்தியதாக கூறபப்டுகிறது.

இதையடுத்து மணமகள் உடனடியாக திருமணத்தை நிறுத்தி உள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத மணமகன் வீட்டார், மணமகள் குடும்பத்தினரை சிறை பிடித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டனர்.

இரு வீட்டாரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இரு தரப்பினரும் திருமணத்தை நிறுத்த ஒப்புக் கொண்டனர். மேலும் திருமணத்திற்கு ஆன செலவுகளை இரு தரப்பினரும் கூட்டாக பகிர்ந்து கொள்வதாக முடிவு செய்தனர்.

இதையும் படிங்க : குடியரசு தலைவர் விழாவில் பவர் கட்! நாசுக்காக கோபப்பட்ட குடியரசு தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.