ETV Bharat / bharat

இறந்துபோனதாகக் கருதப்பட்டவர் உயிருடன் எழுந்த சம்பவம்: உறவினர்கள், மருத்துவர்கள் அதிர்ச்சி - உத்தரப் பிரதேசம்

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உடற்கூராய்வுக்காக கொண்டுசெல்லப்பட்ட நபர், ஏழு மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்
இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்
author img

By

Published : Nov 19, 2021, 10:37 PM IST

Updated : Nov 20, 2021, 12:16 PM IST

உத்தரப் பிரதேசம்: மொராதாபாத், மஜோலா காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகேஷ் நேற்று (நவ.18) இரவு பால் வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது சாலையைக் கடக்கையில் அவருக்கு விபத்து நேர்ந்துள்ளது.

தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடற்கூராய்வுக்காக இரவே ஸ்ரீகேஷ் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது உடலை சோதித்து அவர் உயிரிழந்ததை அங்கிரந்த மருத்துவரும் உறுதி செய்தார்.

இந்நிலையில், இன்று (நவ.18) காலை ஸ்ரீகேஷின் இறுதிச் சடங்குக்கான பணிகளில் அவரது உறவினர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், காவலர்கள் தற்செயலாக அவர் மூச்சு விடுவதைக் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து அவரை சோதித்த அங்கிருந்த மருத்துவர் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பதை உறுதி செய்தார். இறந்ததாகக் கருதப்பட்ட நபர் சுமார் ஏழு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற இச்சம்பவம் உறவினர்களின் மகிழ்ச்சியிலும், அங்கிருந்த பிறரை பரபரப்பிலும் ஆழ்த்தியது.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்
இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்

இதற்கிடையில், அவருக்கு அளிக்கப்பட்ட முதலுதவி மருந்துகள் தாமதமாக வேலை பார்க்கத் தொடங்கியிருக்கலாம் என்றும், அதனால் ஸ்ரீகேஷ் மீண்டிருக்கலாம் எனவும் தற்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டீக்கடை வருமானத்தில் மனைவியுடன் உலகம் சுற்றிய விஜயன் மறைவு!

Last Updated : Nov 20, 2021, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.