மகாராஷ்டிராவின் கோலாப்பூரைச் சேர்ந்தவர், மார்ஷா நதீம் முஜாவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யஜித் சஞ்சய் யாதவ். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் கடந்த 10 ஆண்டுகளாக நட்புப் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், சத்யஜித் சஞ்சய்யின் மகனுக்கும், மார்ஷா நதீம் முஜாவருடைய மகளுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் முதலில் தங்களுடைய காதலைப் பற்றி வீட்டில் சொல்வதற்குத் தயங்கினார்கள். இதனையறிந்த இரு குடும்பத்தினரும் மதத்தின் தடைகளை மீறி, திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, குடும்ப நட்பு பிணைப்பின் மூலம் மார்ஷா நதீம் முஜாவரின் மகளும் சத்யஜித் சஞ்சய் யாதவின் மகனும் கோலாப்பூரில் உள்ள மண்டபத்தில் மிகச் சிறப்பாக, இரண்டு மத முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இது அப்பகுதியில் இந்து - இஸ்லாமிய மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ’’ பணம்கைப்பற்றப்பட்ட தொகுதியில் தேர்தல்: ஆணையம்தான் முடிவெடுக்குக்கும்”