தெலங்கானாவில் மகாபுபாபாத் மாவட்டத்தில் மாம்பழம் தோட்டத்திற்குள் நுழைந்த இரண்டு சிறுவர்களை, அத்தோட்டத்தின் பாதுகாவலர்கள் கட்டி வைத்து அடித்தது மட்டுமின்றி மாட்டு சாணத்தைச் சாப்பிடுமாறு துன்புறுத்தியுள்ளனர்.
எங்களை விட்டுவிடுங்கள் என சிறுவர்கள் கதறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சிறுவர்கள் தாங்கள் வளர்த்த செல்லப்பிராணியைத் தேடியே தோட்டத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சிறுவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் தோர்ரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தோட்ட பாதுகாவலர்கள் பாந்து யக்கு, பாந்து ராமுலு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மொட்டை அடித்தது குத்தமா? ஃபேஸ் ரெககனஷேசனால் வேலையிழந்த ஊபர் ஓட்டுநர்!