ETV Bharat / bharat

Online Game Suicide: பட்டதாரி இளைஞரின் உயிரைப் பறித்த ஆன்லைன் கேம்

பட்டதாரி இளைஞர் ஒருவர் மொபைல் போனில் கேம் விளையாடி (online game Suicide) மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் தற்கொலை
இளைஞர் தற்கொலை
author img

By

Published : Nov 22, 2021, 7:49 AM IST

புதுச்சேரி: மங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகருக்கு, தீபக் (22) என்ற மகன் இருந்துள்ளார். சிவில் பொறியியல் பட்டதாரியான தீபக் கடந்த ஆண்டு கரோனா காலத்திற்குப் பிறகு மிக அதிகமாக கணினி, மொபைல் போனில் ஆன்லைன் கேம் (online game Suicide) விளையாடியுள்ளார்.

அதன் பிறகு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தான் மிகுந்த மனச்சோர்வில் இருப்பதாகவும், அதனால் தன்னிடம் பேசாதீர்கள் என்றும், தான் கோபமாக இருப்பதாகவும் வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தீபக் சனிக்கிழமை இரவு (நவம்பர் 20) திடீரென தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தீபக்கின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணையில், மிக அதிகமான நேரம் தீபக் கேம் விளையாடியதன் விளைவாக மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

மேலும் பிள்ளைகள் மிக அதிக நேரம் மொபைல் போனில் கேம் விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் எனப் பெற்றோர்களுக்கு காவல் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: Goondas Act in chennai: சென்னையில் 351 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.