ETV Bharat / bharat

நேற்று ’ரெட் லைட் ஏரியா’வின் மகள்; இன்று NHRC குழுவில் உறுப்பினர் - மனித உரிமைகள் ஆணையம்

பீகாரில் red light பகுதியில் பிறந்து சாதனை புரிந்த ஒரு பெண்ணின் வெற்றியை அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதுகுறித்த தொகுப்பை காணலாம்.

ரெட் லைட் ஏரியாவின்  மகள்
ரெட் லைட் ஏரியாவின் மகள்
author img

By

Published : Nov 12, 2022, 4:27 PM IST

பீகார்: முசாபர்பூரில் அமைந்துள்ள 'ரெட் லைட் ஏரியா' சதுர்புஜ் இடத்தில் ஒரு பாலியல் தொழிலாளியின் மகளாக நசீமா கட்டூன் பிறந்தார். பிறகு அப்பகுதிலேயே தங்கி படிப்பை முடித்தார். தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலோசகராக நசீமா பட்டியலில் இடம்பெற்றதையடுத்து, அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மகிழ்ச்சியில் பொங்கியுள்ளது.

இதுகுறித்து நசீமா கட்டூன் கூறுகையில், பெரியோர்களின் ஆசீர்வாதத்தாலும், நண்பர்களின் ஆதரவாலும், என்னுடைய முயற்சியாலும் தான் NHRC குழுவில் உறுப்பினராக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களுடைய தாழ்த்தப்பட்ட சமுதாயம் தற்பொழுது தான் முன்னேறி வருகிறது. அதன் அடையாளம் தான் இந்த வாய்ப்பு.

ரெட் லைட் ஏரியாவின் மகள்: தேசிய அளவில் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களைக் கொண்ட குழுவை ஆணையம் அமைத்துள்ளது. அதில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. நான் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக இருப்பேன். எனக்கு இந்த பொறுப்பை கொடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனைத்துப் அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பீகாரில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. நானும் ரெட் லைட் ஏரியாவின் பிறந்து, வளர்ந்தவள் தான். கடந்த 20 வருடங்களாக ரெட் லைட் ஏரியா மக்களுக்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்கவும், குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்கவும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த அத்தியாயத்தில் பர்ச்சம் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி, மக்களுக்கு கல்வி மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கினார்கள்.

ஒரு பெண்ணின் வெற்றி
ஒரு பெண்ணின் வெற்றி

"தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகள் மற்றும் உரிமைகளுக்கான போராட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. சமுதாயத்தில் உள்ள அனைத்து பெரியவர்களின் ஆசியும், நண்பர்களின் ஆதரவும், என்னுடைய கனவும் தான் இந்த மிகப்பெரிய பொறுப்பான, நாட்டின் மிக உயரிய நீதித்துறை அமைப்பான மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பாக NHRC, முக்கிய குழுவில் உறுப்பினராக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது”.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: என் சமுதாய குழந்தைகள் தங்களது கருத்துகளை முன் வைப்பதற்கு சில பத்திரிக்கைகள் சிறந்த வாய்ப்பாக அமைந்தன. சமீப நாட்களாக, முசாபர்பூர் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தலைமையில், மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளர் சந்தீப் அக்னிஹோத்ரி உதவியுடன், அப்பகுதி மக்களிடையே சட்ட விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.

இதனுடன், முசாபர்பூர் மாவட்ட ஆட்சியர் பிரணவ்குமார் தலைமையில், மாவட்ட தொழில் மைய மேலாளர் தர்மேந்திர குமார் சிங் உதவியுடன், அப்பகுதி பெண்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இங்குள்ள பெண்கள் ஜோஹ்ரா சம்வர்தன் குழுமம், ஜுக்னு ரெடிமேட் கார்மென்ட் என்ற அமைப்பை உருவாக்கி தையல் மற்றும் கட்டிங் வேலை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகின்றனர்.

ஒரு பெண்ணின் வெற்றி
ஒரு பெண்ணின் வெற்றி

ரெட் லைட் ஏரியாவில் மகிழ்ச்சி: முசாபர்பூரின் ரெட் லைட் ஏரியாவில் இருந்து மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர் ஆனதையடுத்து ரெட் லைட் ஏரியா பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு காலத்தில் வட பீகாரில் நடனக் கலைஞர்களுக்குப் பெயர் போன முசாபர்பூரின் பகுதி, பின்னர் ரெட் லைட் ஏரியாவாக மாறியது என்று கூறலாம்.

தற்போது என்னுடைய ஒரே நோக்கம் தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவது மட்டுமே, என்னுடைய பணியை நிச்சயமாக சிறப்பாக பணியாற்றுவேன்’ என பேசி முடித்தார்.

ஒரு பெண்ணின் வெற்றி
ஒரு பெண்ணின் வெற்றி

இதையும் படிங்க: தான் படித்த பள்ளிக்குச் சென்று நெகிழ்ந்தார் திரௌபதி முர்மூ...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.