மும்பை: மகாராஷ்டிரா-கர்நாடாக மாநிலங்கள் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சை நீடித்துவருகிறது. கர்நாடகாவில் உள்ள பெலகாவியை மகாராஷ்டிரா மாநில மக்களும், மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரை கர்நாடக மக்களும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த 2 மாவட்டங்களிலும் மாராத்தி மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்களிடையே மோதல் போக்கு நீடிக்கவில்லையென்றாலும், எல்லை மாவட்டங்களில் உள்ள மாராத்தி மற்றும் கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாற்று மாநில பேருந்துகளில் கருப்பு மை பூசுவதும், கண்ணாடிகளை உடைப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த மராத்திய அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் கர்நாடகாவுக்குச் சொந்தமான பேருந்துகளில் நவம்பர் 25ஆம் தேதி கருப்பு மையை பூசினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முனைப்பு காட்டிவருகின்றன. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் ஷம்புராஜ் தேசாய் ஆகியோர் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள மத்தியவர்த்தி மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதியின் செயல்பாட்டாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை டிசம்பர் 6ஆம் தேதி நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் கன்னட அமைப்பினரும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லை விவகாரம்... பேருந்து சேவைகள் நிறுத்தம்...