ஷெர்லின் சோப்ராவின் புகாரின் பேரில், ராக்கி சாவந்த் மற்றும் வழக்கறிஞர் ஃபல்குனி பிரம்மபட் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
''ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது 2 பேரும் தனது ஆட்சேபகரமான வீடியோவைக் காட்டியதாகவும், ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் ஷெர்லின்சோப்ரா குற்றம்சாட்டினார்" என்று மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் ராக்கி சாவந்த் புகார் கொடுத்தார். நவம்பர் 6, 2022அன்று ஷெர்லின் சோப்ரா யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பதிவேற்றியதாகவும், அதில் ஷெர்லின் தனக்கு(ராக்கி சாவந்த்) எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் ராக்கி சாவந்த் போலீசாரிடம் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், ஷெர்லின் சோப்ரா மற்றும் ராக்கி சாவந்தின் தற்போதைய நிலையைகுறித்து, நிர்வாணம் ஒப்புதலுக்குச் சமம் அல்ல என்று ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.
மும்பையின் ஓஷிவாரா காவல்நிலையத்தில் மேற்கூறிய அவதூறான கருத்துக்களைக் கூறியதற்காக ராக்கி சாவந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராக்கி சாவந்த், ஷெர்லினின் கருத்துகளால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.