ETV Bharat / bharat

ஆசிரமத்துக்கு அருகிலிருந்து வயதான 2 பெண்களின் சடலங்கள் மீட்பு - போலீஸ் விசாரணை!

மதுராவில் ஆசிரமத்துக்கு அருகிலிருந்து இரண்டு வயதான பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் இறந்தது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bodies
Bodies
author img

By

Published : Oct 28, 2022, 7:17 PM IST

மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் ஆசிரமம் அருகே இரண்டு வயதான பெண்மணிகளின் சடலங்கள் கிடந்துள்ளன. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த கோட்வாலி போலீசார் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சலமாக மீட்கப்பட்டவர்களில் 68 வயது மதிக்கத்தக்க பெண்மணி பிகாரைச்சேர்ந்தவர் என்றும், 61 வயது மதிக்கத்தக்க பெண்மணி லக்னோவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இரு உடல்களும் சான்ட் காலனியில் உள்ள ஆசிரமத்துக்கு 100 மீட்டர் தொலைவில் கிடந்ததாகவும், இருவரும் எப்படி உயிரிழந்தனர்? உடல்கள் எப்படி அங்கு வந்தன? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கோட்வாலி காவல் நிலையப்பொறுப்பாளர் சூரஜ் பிரகாஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிழிந்த 20 ரூபாய் நோட்டுக்காக ஏற்பட்ட சண்டையால் பெண் மரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.