ETV Bharat / bharat

பெங்களூரு கலவரம்: வழக்கிலிருந்து தப்பிக்க முன்னாள் மேயருக்கு  மருத்துவமனை உதவி - முன்னாள் மேயருக்கு உதவிய மருத்துவமனை

பெங்களூரு: கலவரத்தில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் முன்ளாள் மேயர் சம்பத் ராஜூக்கு கரோனா இருப்பதாக மருத்துவமனை பொய் அறிக்கை தயாரித்திருப்பது அம்பலமாகியுள்ளது.

மேயர்
மேயர்
author img

By

Published : Nov 4, 2020, 6:34 PM IST

பெங்களூருவில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தை கண்டித்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் எம்எல்ஏ வீடு சூறையாடப்பட்டது மட்டுமின்றி டி.ஜே., ஹள்ளி, கே.ஜி., ஹள்ளி காவல் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்‌.

இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். கலவரத்திற்கு காரணமான முக்கிய நபரை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதையடுத்து, களத்திலிறங்கிய என்ஐஏ பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஏர்கன், கூர்மையான ஆயுதங்கள், இரும்பு தடிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்‌.

கலவரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சமர்ப்பித்த 400 பக்க அறிக்கையில், 60 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, முன்னாள் மேயர் சம்பத் ராஜ், முன்னாள் கார்ப்பரேட்டர் ஜாகிர் உசேன் ஆகியோரின் பெயர்கள் கலவரத்திற்கு முக்கியமான நபர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. விசாரணையில் இந்தக் கலவரம் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்திக்கு எதிரான காங்கிரசின் அரசியல் விரோதமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சம்பத் ராஜ், கரோனா தொற்றின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்கு பின் விடுவிக்கப்பட்டார். சம்பத் ராஜை தேடி காவல் துறையினர் சென்றபோதுதான் அவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், சம்பத் ராஜூக்கு கரோனா இருப்பதாக மருத்துவமனை பொய் அறிக்கை தயாரித்திருப்பது அம்பலமாகியுள்ளது. கலவரம் குறித்த வழக்கின் விசாரணையிலிருந்து சம்பத் தப்பிக்க மருத்துவமனை நிர்வாகம் உதவி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள சிசிபி அலுவலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறு,குறு, நடுத்தர வணிகர்களை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கும் உத்தரப் பிரதேசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.