கரோனா வைரஸை தொடர்ந்து நாடு முழுவதும் தற்போது கறுப்புப் பூஞ்சை தொற்று பரவிவருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கறுப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போதுவரை 1,784 எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில், 62 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கறுப்புப் பூஞ்சைத் தொற்றால் அம்மாநிலத்தில் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை கர்நாடக மாநில அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.