ETV Bharat / bharat

திருணமூல்-மா.கம்யூனிஸ்ட் ரகசிய கூட்டாளிகள்: பாஜக விமர்சனம் - பாஜகவின் புதிய பரப்புரை முழக்கம்

கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திருணமூல் ஆகியவை ரகசிய தொகுதி உடன்பாடு வியூகத்தை உருவாக்கி மேற்கு வங்க மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றன. மக்கள் இந்த ரகசிய விளையாட்டை உணர்ந்துவிட்டனர். வரும் தேர்தலில் மக்கள் இரு கட்சிகளுக்கும் சரியான பதிலைத் தருவார்கள் என மத்திய அமைச்சர் தேபாஸ்ரீ சவுத்ரி தெரிவிக்கிறார்.

Trinamool
திரிணாமுல்
author img

By

Published : Mar 27, 2021, 2:21 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திருணமூல் ஆகியவை ரகசிய கூட்டாளிகள் - இது பாஜக பரப்புரையின் புதிய முழக்கம்.

பரப்புரையின் இந்த கோணத்தில் ஒருபடி மேலே சென்று - தினமும் திருணமூல் காங்கிரஸ் குண்டர்களால் சித்ரவதைச் செய்யப்படும் இடது முன்னணி அடிமட்டத் தொண்டர்கள் 'நன்றிகெட்ட இடது முன்னணி தலைவர்கள்' உடனான உறவுகளைத் துண்டித்து, காவிக்குடையின்கீழ் ஒன்றுபடுமாறு உயர்மட்ட பாஜக தலைவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

“என்ன அவமானம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் அடிமட்டத் தொண்டர்கள் தினமும் திருணமூல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்படுகிறார்கள்; வீடுகள் எரிக்கப்படுகின்றன; பலர் பல மாதங்களாக தங்கள் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சில இடங்களில் திருணமூலுடன் ஒரு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள்.

தினமும் திருணமூல் காங்கிரசிடம் அவமானங்களை எதிர்கொள்ளும் அடிமட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்வார்கள்” என்று மேற்கு வங்க பாஜகவின் பொதுச்செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்தார்.

ராய்கஞ்ச் பாஜக மக்களவை உறுப்பினரும் மத்திய அமைச்சருமான தேபாஸ்ரீ சவுத்ரி கூறுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-திருணமூல் ஆகியவை ரகசிய தொகுதி உடன்பாடு வியூகத்தை உருவாக்கி மேற்கு வங்க மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றன.

இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தபின்னரே, இந்த ரகசிய திட்டம் தெளிவாகியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேற்கு வங்க மக்களை கடந்த 34 ஆண்டுகளாக முட்டாளாக்கியது. ஆனால் மேற்கு வங்க மக்கள் திருணமூல்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரகசிய விளையாட்டை உணர்ந்துள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் இரு கட்சிகளுக்கும் சரியான பதிலைத் தருவார்கள்” என்றார்.

திருணமூலுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் இடையிலான ரகசிய தொகுதி உடன்பாட்டை விளக்கும் வகையில், பாசு முதலில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியைக் குறிப்பிட்டார். அங்கு மம்தா பானர்ஜி தனது முன்னாள் நம்பகமான தளபதியும் தற்போதைய பாஜக முன்னணித் தலைவருமான சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

"நந்திகிராமில் சுமார் 35 விழுக்காடு வாக்காளர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இடது முன்னணியின் அப்பாஸ் சித்திக்-கின் அகில இந்திய மதச்சார்பற்ற முன்னணிக்கு, அந்தத் தொகுதியை ஒதுக்குவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நந்திகிராமில் மீனாட்சி முகர்ஜி என்ற ஒரு வேட்பாளரை நிறுத்தியது. இதிலிருந்து முதலமைச்சருக்கு தொகுதியை முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க திருணமூல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது என்பது தெளிவாகிறது" என்ற உள்ளடி அரசியலையும் சயந்தன் பாசு குறிப்பிடுகிறார்.

"பதிலுக்கு திருணமூல் இரண்டு பெரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களான சிலிகுரியில் அசோக் பட்டாச்சார்யா, ஜாதவ்பூரில் டாக்டர் சுஜன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு எதிராக பலவீனமான, அறியப்படாத வேட்பாளர்களை நிறுத்தியதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு உதவுகிறது. சிலிகுரியில், திருணமூல் ஓலி பிரகாஷ் மிஸ்ராவை களமிறக்கியுள்ளது.

அவர் சிலிகுரியைச் சேர்ந்தவர் இல்லை என்பது மட்டுமல்ல, திருணமூலின் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கெடுப்பவர். ஜாதவ்பூரில் திருணமூல் காங்கிரஸ் முற்றிலும் அறியப்படாத வேட்பாளர் அம்லன் மஜும்தாரை நிறுத்தியுள்ளது. இதன் பொருள் நந்திகிராமில் முதலமைச்சரின் வெற்றியை உறுதிசெய்வதற்காக, திருணமூல் சிலிகுரி மற்றும் ஜாதவ்பூர் ஆகிய தொகுதிகளை கம்யூனிஸ்டுக்குப் பரிசாக அளித்துள்ளது” என்றும் பாசு விளக்கினார்.

இதையும் படிங்க: சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்க ஐக்கிய கூட்டணிக்கு பாஜக லஞ்சம் கொடுத்தது: மம்தா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.