மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்லி மாவட்டத்தில் கோகாட் பகுதியில் பாஜக பிரமுகரின் தாயார், அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு(ஏப்ரல்.5) வீட்டுக்குள் புகுந்த நபர்கள் சிலர், பாஜக ஆதரவாளரான அதாக்கை தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த அவரது தாயார், காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர்கள் அதாக்கின் தாயாரையும் பலமாக தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அவரது தாயார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், விசாரணையை தொடங்கிய காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது நிச்சயம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் செயல்தான் என பாஜகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: போலீசார் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி விட்டு கைதிகள் தப்பியோட்டம்!