ETV Bharat / bharat

சந்தேகத்திற்குரிய முறையில் இறந்த பாஜக பிரமுகர் வீட்டிற்குச் சென்ற அமித்ஷா!

பாஜக யுவ மோர்ச்சா செயற்பாட்டாளரான அர்ஜுன் சௌராசியாவின் சடலம், மேற்கு வங்கத்தின் கோஷ் பாகன் பகுதியில் கைவிடப்பட்ட கட்டடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸால் அவர் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியது, பாஜக.

மர்மமான முறையில் இறந்த பாஜக பிரமுகர் வீட்டிற்குச் அமித்ஷா சென்றார்.

author img

By

Published : May 6, 2022, 10:21 PM IST

கொல்கத்தா: வடக்கு கொல்கத்தாவில் உள்ள காசிப்பூர் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்த பாஜக பிரமுகர் வீட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார்.

பாஜகவின் யுவ மோர்ச்சா அமைப்பின் செயற்பாட்டாளராக இருந்த அர்ஜுன் சௌராசியா என்பவர், கோஷ் பாகன் என்னும் இடத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் . இது தற்கொலை அல்ல கொலை என்றும்; மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸார் தான் இதனை செய்தது எனவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். போலீசார் தரப்பில் இது ஆளும் கட்சியனரால் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு வந்த அமித்ஷா இன்று அர்ஜுன் சௌராசியா வீட்டிற்கு சென்றார் எனவும்; திறமையாக வேலை செய்யும் நபரை இழந்து விட்டோம் என பாஜகவின் பேச்சாளர் ஆமிக் பாட்டாச்சார்யா தெரிவித்தார்.

“அமித்ஷா இந்த இறப்பு செய்தி கேட்டதும் மிகவும் வருத்தமடைந்தார். வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் விமான நிலையத்தில் ரத்து செய்ய சொல்லிவிட்டார்” என பாஜகவின் மற்றொரு பிரமுகர் தெரிவித்தார்.

பாஜகவின் குற்றச்சாட்டுகளை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு, “இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: fire flies: இரவில் வண்ணம் கூட்டிய மின்மினிகள்.. ஆனைமலைக் காட்டில் ஒரு அதிசயம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.