ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி இன்று டெல்லியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.
அவர் கூறியதாவது, "வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் மக்கள் இந்திய அணிக்கும், இந்தியா மக்கள் பாகிஸ்தான் அணிக்கும் உற்சாகக்குரல் எழுப்பி கொண்டாடியுள்ளனர். பாகிஸ்தான் அதிபராக முஷரஃப் இருந்தபோது இந்திய அணி வீரராக இருந்த தோனியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
வாஜ்பாய் போன்ற மேன்மையாக தலைவரை கண்டதில்லை. பாகிஸ்தானுக்கு இரு முறை சென்ற அவர் பேச்சுவார்த்தையே தீர்வு என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆனால் சில நாள்களுக்கு முன் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தந்ததாக ஆக்ராவைச் சேர்ந்த சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு வழக்கறிஞர்களும் ஆஜராக முன்வரவில்லை.
காந்தியின் இந்தியாவை பாஜக கோட்சேவின் இந்தியாக மாற்றிவருவதாக எனக்கு தோன்றுகிறது. ஜம்மு காஷ்மீரை ஆதிக்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே, மத்திய அரசு சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை ஜம்மு காஷ்மீருக்கு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விக்கி - கத்ரீனா திருமணம்: தவிர்க்கும் சல்மான் கான்?