ETV Bharat / bharat

2024 மக்களவைத் தேர்தல் - சமூக ஊடகப்பரப்புரைகளில் அதிக கவனம் செலுத்த பாஜக திட்டம்! - சமூக ஊடகப் பிரச்சாரங்களில் அதிக கவனம் செலுத்த பாஜக திட்டம்

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மேற்குவங்க மாநிலத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தீவிர பரப்புரை செய்ய பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

BJP
BJP
author img

By

Published : May 27, 2022, 7:46 PM IST

மேற்குவங்கம்: 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பரப்புரைகள் வலுவான அடித்தளமாக அமைந்தன. பாஜக பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியும், மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜகவினர் மேற்குவங்க மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினர். ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தீவிரமாக பரப்புரை செய்தனர். அதன் விளைவாக 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு தேர்தல் யுக்திகளையும், விளம்பர யுக்திகளையும் கையாள திட்டமிட்டுள்ளனர். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமூக ஊடக பரப்புரையில், அதிகளவு கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ​​சமூக ஊடகங்களில் பரப்புரை செய்வது குறித்து மேற்குவங்க பாஜகவினருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

மேற்கு வங்கம் முழுவதும் உள்ள பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மட்டுமல்லாது, பூத் கமிட்டியில் இருக்கும் பணியாளர்கள் வரை அனைவருக்கும் சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.

மேற்குவங்க பாஜகவின் சமூக ஊடகப்பிரிவின் மாநிலப் பொறுப்பாளர் உஜ்வல் பரீக் இந்த தகவல்களை உறுதிபடுத்தியுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், "2014 மக்களவைத்தேர்தலில் சமூக ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்தன. மாநிலத்தில் உள்ள 6 கோடி வாக்காளர்களில், 4 கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் சமூக வலைதளங்களில் உள்ளனர்.

மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து பாஜக தொண்டர்களையும் சமூக வலைதளங்களில் ஈடுபடுத்துவதே எங்களது முக்கிய நோக்கம். 2024 மக்களவைத் தேர்தலில், சமூக ஊடகப் பரப்புரைக்கு அதிக கவனம் செலுத்தப்படும். 2019 மக்களவை தேர்தலில், மேற்குவங்கத்தில் பாஜக 18 இடங்களை வென்றது. அந்த வெற்றியில் பாஜக சமூக ஊடகப்பிரிவுக்கு முக்கிய பங்கு உள்ளது. வரும் தேர்தலிலும் சமூக ஊடகப் பரப்புரை மூலம் பாஜக அதிக இடங்களைப் பெறும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.