டெல்லி: சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. இதில் உள்ள வட மாநிலங்களில் மத்தியப்பிரதேசத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. மாறாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 17) சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முன்னறிவிப்பு, தாங்கள் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் என்ற நிலையை பாஜக எடுத்துக் கூறுவதாக இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, நேற்று பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் அமித் ஷா ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் 21 வேட்பாளர்களும், மத்தியப்பிரதேச மாநிலத்தில் 39 வேட்பாளர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பட்டியலில் இரு மாநிலத்திலும் தலா 5 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். முக்கியமாக, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகலின் தொகுதியான பதானில் விஜய் பாகலை பாஜக நிறுத்தி உள்ளது.
மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பதான் தொகுதியில் பாகல், பிரேம் நகர் தொகுதியில் பூலன் சிங், பத்கான் தொகுதியில் லக்ஷ்மி ராஜ்வதே, பிரதாபூர் எஸ்டி தொகுதியில் சாகுந்தலா சிங் போர்தே, சாரைபள்ளி எஸ்சி தொகுதியில் சர்லா கொசாரியா, கல்லாரி தொகுதியில் அல்கா சந்திரகார், குஜ் தொகுதியில் கீதா காஷி மற்றும் பாஸ்டர் எஸ்டி தொகுதியில் மணிராம் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
-
BJP releases the first list of 21 candidates for the upcoming Chhattisgarh Assembly Elections. pic.twitter.com/7vhoSgfbCY
— ANI (@ANI) August 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BJP releases the first list of 21 candidates for the upcoming Chhattisgarh Assembly Elections. pic.twitter.com/7vhoSgfbCY
— ANI (@ANI) August 17, 2023BJP releases the first list of 21 candidates for the upcoming Chhattisgarh Assembly Elections. pic.twitter.com/7vhoSgfbCY
— ANI (@ANI) August 17, 2023
அதேபோல், மத்தியப்பிரதேச மாநிலத்தில் சபல்கர் தொகுதியில் சர்லா விஜயேந்திர ராவத், சாசாவுரா தொகுதியில் பிரியங்கா மீனா, சதார்பூர் தொகுதியில் லலிதா யாதவ், ஜபல்பூர் புர்பா எஸ்சி தொகுதியில் அஞ்சல் சோன்கர், பேட்லவாத் தொகுதியில் நிர்மலா பூரியா, ஜபூவா எஸ்டி தொகுதியில் பாணு புரியா, போபால் உத்தர் தொகுதியில் அலோக் ஷர்மா மற்றும் மத்திய போபால் தொகுதியில் துருவ் நாராயண் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளராக கருதப்படுகின்றனர்.
-
BJP releases the first list of 39 candidates for the upcoming Madhya Pradesh Assembly Elections. pic.twitter.com/7xdtQFxz9M
— ANI (@ANI) August 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BJP releases the first list of 39 candidates for the upcoming Madhya Pradesh Assembly Elections. pic.twitter.com/7xdtQFxz9M
— ANI (@ANI) August 17, 2023BJP releases the first list of 39 candidates for the upcoming Madhya Pradesh Assembly Elections. pic.twitter.com/7xdtQFxz9M
— ANI (@ANI) August 17, 2023
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘நேருவை அவரின் பணிகளால் மக்கள் அறிகிறார்கள்’ - நேரு அருங்காட்சியக பெயர் மாற்றம் குறித்து ராகுல் காந்தி கருத்து