மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முரண்பாடான கொள்கைகள் கொண்ட கட்சிகள் இந்தக் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளன.
மோடி - சரத் பவார் சந்திப்பின் ரகசியம்
அண்மையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம் குறித்து பேசியதாக சரத் பவார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மகாராஷ்டிரா அரசியல் தொடர்பான நகர்வுகள் உள்ளதாக ஊகங்கள் கூறப்பட்டன.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே சரத் பாவருக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்து, மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்த வேண்டும் எனவும்; சரத் பவாரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்துவருவதால் கூட்டணியிலிருந்து அவர் விலக வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
சரத் பவாருக்கும் பிரதமர் மோடிக்கு நல்ல நட்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மண்டேலா: இனத்தின் உரிமைக் குரலாக ஒலித்த 'கருப்பின காவலன்'