ETV Bharat / bharat

பாஜகவிலிருந்து விலகி 'தாய் கட்சி' திருணமூல் திரும்பிய முகுல் ராய் - பாஜக செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர் முகுல் ராய், மீண்டும் தனது தாய்க் கட்சியான திருணமூல் காங்கிரசில் இணைந்துள்ளார்.

முகுல் ராய்
முகுல் ராய்
author img

By

Published : Jun 11, 2021, 5:57 PM IST

பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், திருணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூன்.11) இணைந்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னனிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

திருணமூல் டூ பாஜக

மம்தா பானர்ஜி திருணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே முக்கிய சகாவாக இருந்துவந்த முகுல் ராய், 2017ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார்.

அக்கட்சியில் தேசிய துணைத் தலைவர் என்ற உயர் பதவி முகுல் ராய்க்கு கிட்டிய நிலையில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 18 இடங்களைக் கைப்பற்றி பாஜக மம்தாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

அந்த நம்பிக்கையை வைத்து 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக, முன்னேற்றம் கண்டாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மாறாக மம்தா அபார வெற்றிபெற்று மூன்றாவது முறை தொடர்ந்து முதலமைச்சரானார்.

தாய் கட்சிக்குத் திரும்பிய முகுல் ராய்

திரிணாமூல் காங்கிரசில் இணைந்த முகுல் ராய்
திருணமூல் காங்கிரசில் இணைந்த முகுல் ராய்

இந்தப் பின்னணியில்தான் முகுல் ராய் தனது அரசியலில் யூ-டர்ன் அடித்து தாய்க் கட்சியான திருணமூல் காங்கிரசுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அவருடன் அவரது மகன் சுப்ராங்சு ராய்யும் திருணமூலில் இணைந்துள்ளனர்.

தற்போதைய சூழலில் யாரும் பாஜகவில் இருக்க மாட்டார்கள் என திருணமூலில் இணைந்தப் பின் முகுல் ராய் தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புகைச்சலுக்கு மத்தியில் பிரதமர் மோடியை சந்தித்த யோகி - பின்னணி என்ன?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.