பிகார் (முஸாஃபர்பூர்): மக்கள் தற்போது உயிருடன் இருப்பதற்கு மோடி தான் காரணம் என பிகாரின் சட்டத்துறை அமைச்சர் ராம் சுரத் ராய் பேசியுள்ளார். கடந்த வெள்ளி (ஜூலை 29) அன்று முஸாஃபர்பூரில் நடந்த ஓர் கூட்டத்தில் பேசுகையில், “ கோவிட் தொற்று நோய் உலகையே அச்சுறுத்தியது, ஆனால் இந்தியாவில் நிலமை அவ்வளவு மோசமாகவில்லை.
பாகிஸ்தானில் என்ன நடந்தது என்று கேட்டுப் பாருங்கள். இங்கு நாம் அமைதியுடனும் மனநிம்மதியுடனும் வாழ்கிறோம். நாம் அனைவரும் தற்போது உயிருடன் இருப்பதற்கு மோடி தான் காரணம். மோடி மட்டும் தடுப்பூசியைக் கொண்டு வந்து அதை மக்களுக்கு இலவசமாக வழங்காமல் இருந்திருந்தால் நாம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்.
நாம் அனைவரும் கோவிட் தொற்றால் நம் குடும்ப நபர்களையும், நண்பர்களையும் இழந்திருப்போம். நான் கூட என் மைத்துனரை இழந்தேன்” எனப் பேசினார். இந்திய தற்போது 200 கோடி தடுப்பூசிகளை வழங்கி மாபெரும் சாதனை படைத்துள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்த கணக்கின் படி, தற்போது வரை 204.25 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு