டெல்லி: விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பேசும்போது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரை மோடி தான் கொன்றுவிட்டார். காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்கப் போவதாகக் கூறியதால், பாஜக தான் கொன்றுவிட்டது” என்று பகிரங்கமாகத் தான் குற்றாட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இவரது சர்ச்சை பேச்சு பாஜக தலைவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக மாநில, தேசிய தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
When anger mounts against misgovernance, DMK MLAs have resorted to lies, as always. @CMOTamilnadu should be reminded that @BJP4TamilNadu will not remain calm forever. pic.twitter.com/gMH9oyH1YC
— K.Annamalai (@annamalai_k) January 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When anger mounts against misgovernance, DMK MLAs have resorted to lies, as always. @CMOTamilnadu should be reminded that @BJP4TamilNadu will not remain calm forever. pic.twitter.com/gMH9oyH1YC
— K.Annamalai (@annamalai_k) January 7, 2023When anger mounts against misgovernance, DMK MLAs have resorted to lies, as always. @CMOTamilnadu should be reminded that @BJP4TamilNadu will not remain calm forever. pic.twitter.com/gMH9oyH1YC
— K.Annamalai (@annamalai_k) January 7, 2023
இந்த விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தவறான ஆளுமைக்கு எதிராகக் கோபம் அதிகரிக்கும் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போதும் போல் பொய்களைக் கையாண்டு விடுவார்கள். இதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அமைதியாக இருக்கலாம், ஆனால் பாஜக அமைதியாக இருக்காது” எனப் பதிவிட்டிருந்தார்.
-
I can't believe that DMK can stoop to this level! No one should drop own moral standards this far just for political gains. https://t.co/FlkgsuQI5M
— Kiren Rijiju (@KirenRijiju) January 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I can't believe that DMK can stoop to this level! No one should drop own moral standards this far just for political gains. https://t.co/FlkgsuQI5M
— Kiren Rijiju (@KirenRijiju) January 8, 2023I can't believe that DMK can stoop to this level! No one should drop own moral standards this far just for political gains. https://t.co/FlkgsuQI5M
— Kiren Rijiju (@KirenRijiju) January 8, 2023
இதனைத் தொடர்ந்து பாஜக எம்பி கிரண் ரிஜிஜூ தனது டிவிட்டர் பக்கத்தில், “திமுக இந்த அளவுக்கு நடந்துக் கொள்ளும் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக தங்களது தரத்தை யாரும் இவ்வாறு தாழ்த்திக்கொள்ளக் கூடாது” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதாவை கொன்றது மோடி தான்' - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்