ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் செயற்குழு கூட்டம் - தென் மாநிலங்களுக்கு பாஜக ஸ்கெட்சா...? - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

ஹைதராபாத்தில் அரசியல் அதிகாரங்களில் உள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஏஐஎம்ஐஎம் அசாதுதீன் ஒவைசி ஆகியோருக்கு சவால்விடும் வகையில் பாஜகவின் இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பாஜக செயற்குழு கூட்டம்
பாஜக செயற்குழு கூட்டம்
author img

By

Published : Jul 2, 2022, 2:40 PM IST

ஹைதராபாத்: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்றும் (ஜூலை 2), நாளையும் (ஜூலை 3) நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் நடந்துவந்த மகா விகாஷ் கூட்டணி கவிழ்க்கப்பட்டு ஆட்சியில் பங்கெடுத்துவிட்ட பாஜக, தென் மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை நிறுவும் முனைப்பில் உள்ளது.

எனவே, அடுத்த ஆண்டு நடக்க உள்ள தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் வைத்து, இந்த செயற்குழு கூட்டத்தை ஹைதராபாத்தில் நடத்துகிறது. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும் வலுவாக இருக்கும் பாஜக, தெலங்கானாவையும் கைப்பற்ற இந்த வியூகத்தை வகுத்துள்ளது.

மோடி என்ட்ரி: இந்த இரண்டு நாள்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் ஹைதராபாத் நகர் முழுவதும் பாஜகவினரால் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறும் சர்வதேச மாநாட்டு மையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை 10 மணிக்கு வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மையத்தின் உள்ளே சென்றுவிட்டார். மேலும், இக்கூட்டம் குறித்து பாஜக தலைவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று மாலை பங்கெடுக்க உள்ளார்.

தென்னகத்திற்கு ரூட் போடும் பாஜக: ஹைதராபாத்தில் அரசியல் அதிகாரங்களில் உள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோருக்கு சவால்விடும் வகையில் இந்தக் கூட்டம் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், மற்ற தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகியவற்றில் நுழைய இதை ஒரு 'ஓப்பனிங்' ஆக பாஜக பார்க்கிறது. ஏனென்றால், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து ஒரு மக்களவை உறுப்பினரைக் கூட பாஜக கடந்த தேர்தலில் பெறவில்லை. தெலங்கானாவிலும் மொத்தமுள்ள 17 இடங்களில் நான்கு பாஜகவுக்கு கிடைத்தது.

மக்களவை தேர்தல் டாஸ்க்: அதுமட்டுமல்லாமல், ஹைதராபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலிலும், நகர்ப்புறங்களில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, இவை அனைத்தையும் அடுத்து வரும் 2024 மக்களவைத்தேர்தலில் அறுவடை செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. குறைந்தபட்சம் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து குறைந்தபட்சம் 90 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்ற பாஜக முழுவீச்சில் செயல்பட போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலைக்கு அழைப்பு: ஹைதராபாத் என்பது அனைத்து தரப்பு மக்களும் கலந்திருக்கும் நகரம் என்பதால், அதனால்தான் பாஜக இந்த செயற்குழு கூட்டத்தை அங்கு நடத்த முன்வந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்தில் அதிகம் இருப்பார்கள் என்பதால் அவர்களையும் பாஜகவினர் கவர இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை எனப் பிற மாநிலங்களில் இருந்தும் பாஜக தலைவர்களை இக்கூட்டத்திற்கு அக்கட்சி அழைத்திருப்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: Exclusive:பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.