ETV Bharat / bharat

பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு தோல்வி - தேர்தல் வியூகத்தை மாற்றுமா பாஜக! - காங்கிரஸ் சி எம்

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளை ஆட்டம் காணச் செய்து உள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வியூகத்தை பாஜக மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Karnataka
Karnataka
author img

By

Published : May 13, 2023, 6:20 PM IST

பெங்களூரு : இந்துத்துவா கொள்கைகளைக் கொண்டு தொடர் வெற்றிகளை அறுவடை செய்து வந்த பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கர்நாடகத் தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளன.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இன்று (மே. 13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களைக் கைப்பற்றி ஏறத்தாழ ஆட்சி அமைப்பதை உறுதி செய்துவிட்டது.

இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இந்துத்துவா கொள்கைகளை, முன்னிறுத்தி பாஜக வெற்றி பெற்று வந்த நிலையில், கர்நாடகாவில் அது பலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக கண்ட படுதோல்வி தென்னிந்திய மாநிலங்களில் இந்துத்துவா கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மோடி - அமித் ஷா கூட்டணியின் ஆதிக்கத்தை, அசைத்துப் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி மொழி பேசும் மாநிலங்களை கைப்பற்றியதுபோல் கர்நாடகாவில், பாஜக கொடியைப் பறக்கவிட நினைத்த மோடி - அமித் ஷா எண்ணங்களுக்கு தேர்தல் முடிவுகள் விதிவிலக்காக மாறி உள்ளன. அதேநேரம் பாஜகவின் இந்தி மற்றும் இந்துத்துவா கொள்கைகளுக்கு அந்த கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பாவே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். மோடி - அமித் ஷா கூட்டணிக்கு அடிபணியாமல் தனி அரசியல் நடத்தி வருகிறார்.

உள்கட்சி பூசல்கள் காரணமாக, பாஜகவை விட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் லக்‌ஷ்மண் சாவடி ஆகியோர் விலகியதுகூட அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் லக்‌ஷ்மண் சாவடி காங்கிரசில் இணைந்தனர்.

லிங்காயத் சமூக மக்களின் அடையாளமாக கருதப்பட்ட ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியைத் தழுவிய போதிலும், லக்‌ஷ்மண் சாவடி வெற்றிபெற்றது பாஜகவுக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியது. பாஜகவில் இருந்து இருவரும் விலகியது, கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், பாஜகவின் முக்கிய கருத்துகளான சித்தாந்தம் மற்றும் தலைமை ஆகிய இரண்டிற்கும் சவாலாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அரசியல் கொள்களை அடிப்படையாக கொண்டு, பாஜக தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் கர்நாடகாவில் சாதி மற்றும் சமூக விகிதம் வாக்கு வங்கி அரசியலில் வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கொண்டு இருந்தது. அதன் காரணமாகவே, காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற குற்றச்சாட்டை கர்நாடக மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் களத்தில் இந்து அலையினை உருவாக்க, 'பஜ்ரங்பலி கி ஜெய்' உள்ளிட்ட பாஜகவின் முயற்சிகள் எடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி, தனது பிரசாரத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டு இருந்தது. பஜ்ரங் தள அமைப்பைத் தடை செய்வது உள்ளிட்ட அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, இந்து விரோத உணர்வு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி கர்நாடக மக்களின் ஆதரவைப் பெற்றது.

இதன் காரணமாகவே பாஜகவின் இந்துத்துவா கொள்கைகள் கர்நாடக அரசியலில் பெரிய அளவில் பிரதி பலன்களை காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள பாஜக தனது வியூகத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : Karnataka election: நட்சத்திர வாரிசுகள் வெற்றி முகம்! பிரியங்க் கார்கே தொடங்கி விஜயேந்திரா வரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.