குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் காட்லோடியா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி நேற்று பதவியை ராஜினாமா செய்த நிலையில், பூபேந்திர படேல் புதிய முதலமைச்சராகத் தேர்வாகியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக விஜய் ரூபாணி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய முதலமைச்சர் பொறுப்புக்கு மன்ஷுக் மாண்டவியா, நிதின் படேல் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுவந்த நிலையில் யாரும் யூகிக்காத பூபேந்திர படேல் புதிய முதலமைச்சராகத் தேர்வாகியுள்ளார். இவர் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் படேலின் முக்கிய விசுவாசி ஆவார்.
இன்று மாலை ஆளுநரிடம் உரிமை கோரும் பூபேந்திர படேல் நாளை பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திரா காந்திக்கு எதிரான தீர்ப்பு தைரியம் மிக்கது - தலைமை நீதிபதி ரமணா