ETV Bharat / bharat

’ஏன் இந்திய சாலைகள் முகலாலய பெயர்களை சுமக்க வேண்டும்..?’ - பாஜக கேள்வி - முகலாலய பெயர்கள் கொண்ட சாலைகளின் பெயர்களை மாற்ற பாஜக கோரிக்கை

லுத்யென்ஸ் டெல்லியில் உள்ள முகலாலய பெயர்கள் கொண்ட சாலைகளின் பெயரை மாற்ற பாஜகவின் டெல்லி மாநில தலைவர் ஆதேஷ் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

’ஏன் இந்திய சாலைகள் முகலாலய பெயர்களை சுமக்க வேண்டும்..?’ - பாஜக கேள்வி

author img

By

Published : May 11, 2022, 10:30 PM IST

புது டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மாநில தலைவர் ஆதேஷ் குப்தா, நேற்று(மே 10) வட-டெல்லி மாநகராட்சியிடம் லுத்யென்ஸ் டெல்லியிலுள்ள முகலாலய மன்னர்களின் பெயரில் இருக்கும் சாலைகளுக்கு மறைந்த இந்தியத் தலைவர்களின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது கோரிக்கையில் பெயர் மாற்றம் செய்யக்கோரி குறிப்பிட்ட சாலைகள் கீழ் வருமாறு , துக்ளக் சாலையை குரு கோபிந்த் சிங் சாலையாகவும், அக்பர் சாலையை மஹரன பிரதாப் சாலையாகவும், ஔரங்கசிப் சந்தை ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சந்தாகவும், சாஜஹான் சாலையை ஜெனெரல் பிபின் ராவத் சாலையாகவும் பெயர் மாற்றக்கோரி கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து குப்தா கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் மோடியின் ஆட்சியில் தீர்க்கப்பட்டு வருகிறது, அதில் இன்னும் சில மட்டும் மிச்சம் உள்ளது. அதுவும் தீர்க்கப்படும். டெல்லி சாலைகளின் பெயராக இருக்கும் நபர்கள் நம் நாட்டிற்கு படையெடுத்து வந்தவர்கள். ஏன் அவர்களின் பெயர்களை இந்திய சலைகள் சுமக்க வேண்டும்..?. அப்படி அவர்களின் பெயரை நமது சாலைகள் சூடியிருப்பது ’அடிமைத்தனத்தின் அடையாளம்’. ஆகையால் இந்த சாலைகளின் பெயர்களை உடனடியாக மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொக்ரான் சோதனை வெற்றி தினம் - இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நன்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.