ETV Bharat / bharat

கர்நாடகாவில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பாஜக வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி வெற்றி! - Karnataka election 2023 full details in tamil

கர்நாடகாவின் ஜெயாநகர் தொகுதியில் கடும் போராட்டங்களுக்கு பிறகு பாஜக வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவின் சிகே ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

author img

By

Published : May 14, 2023, 8:15 AM IST

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று (மே 13) காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, நீண்ட நேரமாக ஜெயா நகர் தொகுதி முடிவு மட்டும் அறிவிக்கப்படாமலே இருந்தது.

பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜெயா நகர் சட்டமன்றத் தொகுதியில், பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி - காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்பட்டனர். முன்னதாக, 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால், ராமமூர்த்தி தரப்பில் மீண்டும் வாக்கு எண்ணப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஆளும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு முடிவை தங்களுக்கு (பாஜக) சாதகமாக மாற்றி விடும் என்பதால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டியின் தந்தையும், மாநில செயற்குழு தலைவருமான ராமலிங்கா ரெட்டி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள், வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, மாநில தகவல் துறை அறிக்கையில் வெளியிடப்பட்டது. இதனை தேர்தல் அதிகாரிகளும் உறுதி செய்தனர். இதன்படி, சிகே ராமமூர்த்தி 57 ஆயிரத்து 797 வாக்குகளும், சௌமியா ரெட்டி 57 ஆயிரத்து 781 வாக்குகளும் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • ' class='align-text-top noRightClick twitterSection' data=''>

மொத்தமாக 135 இடங்களைக் கைப்பற்றி உள்ள காங்கிரஸ், அறுதிப் பெரும்பான்மை உடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது. அதேநேரம், பாஜக 66, மதச்சார்பற்ற ஜனதா தளம் 19, கல்யாண ராஜ்ய பிரகதி மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்‌ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் எடுபடாத அண்ணாமலையின் வியூகம்.. காரணம் என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.