கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் பிராங்க்கோ முலக்கல் மீது கன்னிகாஸ்திரி ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் ஒன்றை அளித்தார்.
இது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்து அதன் விசாரணை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை கோட்டயம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் இன்று வழங்கியது.
அதன்படி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிரோங்க்கோவை குற்றவாளி என்று நிரூபணம் செய்ய போதிய ஆதாரம் இல்லை. எனவே பாதிரியார் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார் என நீதிபதி கோபகுமார் தீர்ப்பளித்துள்ளார்.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதிரியார் பிராங்க்கோ, இறைவனுக்கு நன்றி, உண்மை இறுதியாக வெல்லும் என்ற நம்பிக்கை மெய்யாகியுள்ளது என்றார்.
இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள கன்னிகாஸ்திரி தரப்பு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகளை அடக்க துடிக்கும் வீரர்கள்