திருவனந்தப்புரம்: கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் ஒரு வாரகாலமாக 10,000க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்தன. இதனால், கால்நடை மருத்துவர்கள் இறந்த வாத்துகளின் மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
அந்த ஆய்வின் முடிவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் கொல்லப்பட்டன. இந்த நிலையில், ஆலப்புழா, கோட்டயம் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும், காய்ச்சல் பரவிவருவதால், 55,000 கோழிகளையும், வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவை இறைச்சி, முட்டைகள் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. ஜூலை மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கருத்தில் கொண்டு கேரள அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் பரவியதா?
பறவைக்காய்ச்சலை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு கேரளா, கர்நாடகாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தவும், கிருமி நாசினி தெளிக்கவும் உத்தவிட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள இறைச்சி கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுவருவதாகவும், அங்குள்ள பறவைகளுக்கு காய்ச்சல் பரிசோனை செய்யப்படஉள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் பறவை காய்ச்சல்... 13,000 வாத்துகள் இறப்பு...
Conclusion: