ETV Bharat / bharat

பாஜகவில் சேர்ந்தார் பிபின் ராவத் சகோதரர் - தேர்தலில் போட்டியா? - விஜய் ராவத் பாஜகவில் இணைந்தார்

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத் பாஜகவில் இணைந்துள்ளார்.

Gen Bipin Rawat
Gen Bipin Rawat
author img

By

Published : Jan 20, 2022, 2:23 PM IST

Updated : Jan 20, 2022, 3:05 PM IST

மறைந்த ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரர் கர்னல் விஜய் ராவத் பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மாநில வளர்ச்சியை நோக்கமாக கொண்டு தான் கட்சிப் பணி ஆற்றவுள்ளதாக விஜய் ராவத் தெரிவித்துள்ளார்.

விஜய் ராவத் இணைப்பு குறித்து பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து நாட்டின் மிக உயரிய ராணுவ பதவியில் வகித்தவர் பிபின் ராவத், அவரின் சகோதரரின் வருகை கட்சியை நிச்சயம் மேம்படுத்தும்” என்றார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ராவத்தை வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் சந்தைப் பயன்பாட்டிற்கு அனுமதி - நிபுணர் குழு பரிந்துரை

Last Updated : Jan 20, 2022, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.