ETV Bharat / bharat

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பிய யூடியூபர் போலீசில் சரண்! - மணீஷ் காஷ்யாப் சரண்டர்

தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய வழக்கில் இரு மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மணீஷ் காஷ்யாப் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 18, 2023, 12:12 PM IST

பாட்னா: தமிழ்நாட்டில், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ போலியானது என தமிழக காவல் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை காவல் துறை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் புகார் அளிக்கலாம் என காவல் துறை தரப்பில் புகார் எண்கள் வெளியிடப்பட்டன.

மேலும் மாவட்டந்தோறும் உள்ள தொழில் துறை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை, நேரில் சென்று சந்தித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர், அவர்களுக்கு புரியும் வகையில் இந்தி மொழியில் அறிவிப்புகளை வெளியிட்டனர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மறுபுறம் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் சட்டமன்றத்தில் எதிரொலித்த நிலையில், நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சிறப்பு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். தமிழகம் வந்த சிறப்புக் குழு பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கேட்டறிந்தது.

மேலும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக குழு அறிக்கை அளித்தது. இதனிடையே போலியாக வதந்தி பரப்பியவர்களை தேடி தமிழகத்தில் இருந்து தனிப்படை போலீசார் பீகார், டெல்லிக்கு சென்றனர். வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் தொடர்பாக போலி வீடியோ பரப்பியதாக பீகாரின் ஜமுன் மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார், ராகேஷ் ரஞ்சன், உமேஷ் மகாடோ உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் 40க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த வழக்கில் ஜக்கன்பூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வீடியோ எடுத்தது உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் விசாரணையில் வெளி வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பீகார் போலீசார் உள்பட 10 பேர் கொண்ட குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலி வீடியோ பரப்பிய வழக்கு தொடர்பாக யூடியூபர் ஒருவர் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளார். பெட்டயா அடுத்த ஜெகதீஷ்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் யயூடியூபர் மணீஷ் காஷ்யாப் சரணடைந்ததாக பீகார் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பில் வழக்கில் தமிழ்நாடு மற்றும் பீகார் போலீசாரால் யூடுயூபர் மணீஷ் காஷ்யாப் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மணீஷ் காஷ்யாப் மீது ஏற்கனவே பண மோசடி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முன்ஜாமீன் கோரி பாட்னா நீதிமன்றத்தில் மணீஷ் காஷ்யாப் மனுத் தாக்கல் செய்து இருந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மணீஷ் காஷ்யாப்பின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய பீகார் போலீசார் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிலையில், மணீஷ் காஷ்யாப் தாமாக முன்வந்து சரணடைந்து உள்ளார்.

இதையும் படிங்க: பீகாரில் கர்ப்பிணிச் சிறுமி எரித்துக் கொலை! - கோர சம்பவத்தின் கொடூர பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.