பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மகா கூட்டணியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவை வாழ்த்துவதற்கு அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் கூடத்தொடங்கினார். இதனால், அவரது வீட்டைச் சுற்றி புதிதாக முளைத்த ஐஸ்கிரீம் கடைகள், கரும்புச்சாறு கடைகளின் உரிமையாளர்கள் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளனர்.
மகா பந்தன் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியவுடன், தேஜஸ்வி யாதவ்வின் வீட்டிற்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் கூடத்தொடங்கியுள்ளனர். சமாஸ்திபூர் கிராமத்தில் இருந்து வந்த ஒருவர், மீன்களுடன் தேஜஸ்வியின் வீட்டிற்கு வந்தார்.
மீன் நல்ல அதிர்ஷ்டம் என குறிக்கப்படுவதால், தான் மீனுடன் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், பிகாரின் முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்கப்போவது உறுதி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரலாறு படைப்பாரா தேஜஸ்வி யாதவ்?