பகாஹா: பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகாஹா சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி புலி, கடந்த 5ஆம் தேதி சிங்கி கிராமத்தில் 12 வயது சிறுமியை தாக்கிக் கொன்றது. கடந்த 6ஆம் தேதி இரவு, ஹர்ஹியா சாரே பகுதியில் 35 வயதான ஒருவரையும் தாக்கி இழுத்துச் சென்றது. இன்று(அக்.8) காலையில் வீட்டிற்குள் நுழைந்து, தாயையும் மகனையும் புலி அடித்துக் கொன்றது. இந்த புலி கடந்த 2 மாதங்களில் 9 பேரை தாக்கிக் கொன்றது.
இதனால் மக்கள் பீதியில் இருந்த நிலையில், ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 400-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று(அக்.8) பிற்பகலில் வனத்துறையினர் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பகாஹா நகரில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.