ETV Bharat / bharat

40 ஆண்டுகளாக மசூதியில் வழிபாடு நடத்தும் இந்து மக்கள்

author img

By

Published : Apr 28, 2022, 10:32 AM IST

பிகார் மாநிலம் நாளந்தாவில் 40 ஆண்டுகளாக மசூதி ஒன்றை இந்து மக்கள் பராமரித்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

bihar-hindu-villagers-in-maadi-at-odds-with-communal-rifts-treat-a-mosque-like-a-temple

பாட்னா: பிகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மாடி கிராமத்தில் 400 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள மசூதியை 40 ஆண்டுகளாக இந்து மக்கள் கவனித்து வருகின்றனர். இங்கு தினமும் 5 முறை தவறாமல் பிரார்த்தனை நடக்கிறது.

மசூதி விதிகளின்படி, அதன் வளாகம் தினமும் இரண்டு முறை சுத்தம் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், வர்ணம் பூசப்படுகிறது. இந்த கிராமத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், விழா நாள்களின் போது மக்கள் மசூதிக்கு வந்துசெல்கின்றனர்.

இதுகுறித்து கிராமவாசியான ஜானகி பண்டிட் தெரிவிக்கையில், "எங்கள் கிராமத்தில், 1981ஆம் ஆண்டு மதக்கலவரம் நடந்தது. அப்போதிலிருந்து முஸ்லிம் மக்கள் இங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். சில ஆண்டுகளில் 45 முஸ்லிம் குடும்பங்கள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. அப்போதிலிருந்து, மசூதியை நாங்கள் பராமரித்துவருகிறோம். பிரார்த்தனை செய்கிறோம். எங்களை பொறுத்தவரை இதுவும் கோயில் போன்றதே" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேரளாவின் கனவுத்திட்டம் கோழிக்கோட்டில் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.