பாட்னா: பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பீர்பூர் நடுநிலைப் பள்ளியின் வகுப்பறையில் 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெகுசராய் போலீசார் கூறுகையில், பீர்பூர் நடுநிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவர் நேற்று (டிசம்பர் 12) வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியின் குடும்பத்தார் இரவு முழுவதும் அவரை தேடினர். இதையடுத்து இன்று (டிசம்பர் 13) பள்ளிக்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுமி பூட்டப்பட்ட வகுப்பறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியர்களை தனி அறையில் வைத்து பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டப்பாட்டத்தை கலைத்தோம். சம்பவயிடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் குழுக்கள் வரவழைப்பட்டன. அதனடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் சிலிண்டர் வெடி விபத்து.. உயிரிழப்பு 22ஆக உயர்வு..