ETV Bharat / bharat

சட்டசபையில் பெண்கள் குறித்த பேச்சு..! பகிரங்க மன்னிப்பு கோரிய பீகார் முதலமைச்சர்! - NCW condemns Bihar Chief Minister

Birth control remarks in Bihar Assembly: பீகார் சட்டசபையில் பிறப்பு விகிதம் குறைந்தது குறித்து பேசியபோது, அந்தரங்க விஷயம் குறித்து தான் பேசிய பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்.

bihar chief minister Nitish Kumar apologizes for his Birth control remarks in Bihar Assembly
பகீரங்க மன்னிப்பு கோரிய பீகார் முதலமைச்சர்
author img

By ANI

Published : Nov 8, 2023, 6:16 PM IST

பீகார்: பீகார் சட்டசபையில் குளிர்கால கூட்டுத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பீகாரில் கருத்தரித்தல் விகிதம் 4.3 சதவிகிதத்தில் இருந்து 2.9 சதவிகிதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பீகாரில் மக்கள்தொகை கட்டுபாட்டிற்கு இளம்தலைமுறை பெண்களின் பாலியல் குறித்த விழிப்புணர்வு தான் காரணம் எனத் தெரிவித்தார். மேலும், அவர் கணவன் - மனைவி இடையேயான அந்தரங்கம் குறித்து சைகையுடன் பேசினார். சட்டசபையில் நிதிஷ்குமாரின் இத்தகைய பேச்சு பிற பெண் உறுப்பினர்களை முகம் சுழிக்க வைத்தது. மேலும், அவர்கள் நிதிஷ்குமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

சட்டசபையில் நிதிஷ்குமார் பேசியது சர்ச்சையான நிலையில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், “நிதிஷ்குமாரின் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாகத் தான் அவர் விளக்க முயன்றார்” என விளக்கமளித்தார்.

இந்நிலையில், நிதிஷ்குமாரின் சர்ச்சை பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்து தேசிய மகளி ஆணையத்தின் X சமூக வலைத்தள பக்கத்தில், “சட்டசபையில் பெண்கள் கருவுறுதல் குறித்து நிதிஷ்குமார் பேசியது கண்டிக்கத்தக்கது. அவரது கருத்துகள் பிற்போக்குத்தனமானவை. புண்படுத்தக்கூடிய இந்த பேச்சுக்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவிட்டிருந்தது.

  • National Commission for Women, vehemently condemns
    the recent statements made by Nitish Kumar in the Vidhan Sabha concerning women's fertility and education and linking it to the population of the country.Such remarks are not only regressive but also egregiously insensitive to…

    — NCW (@NCWIndia) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு இந்த விவகாரம் குறித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “பாலியல் கல்வியை கொண்டு வருவதற்கு காங்கிரசுக்கு ஒருபோதும் தைரியம் இருந்ததில்லை. ஆனால் அவதூறான கருத்துகளை மட்டும் எப்படி பரப்ப முடிகிறதோ. பெண்களை இழிவான முறையில், பாலியல் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பேசிய பேச்சினை பாலியல் கல்வி என மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.

  • CONgress never had the guts to bring sex education in our education policy, but remains in party with a man who speaks absolute filth, makes most crass statements, abuses women in a very derogatory manner, showcases his low class mind, puts on display how women are disrespected…

    — KhushbuSundar (@khushsundar) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரியங்கா காந்தி, சோனியா காந்தி யாராவது இதுகுறித்து வாய் திறப்பார்களா? அல்லது இண்டியா கூட்டணியில் உள்ள யாராவது இது என்ன மாதிரியான பாலியல் கல்வி என்பது குறித்து விளக்கவும். நிதிஷ்குமார் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் உட்பட ஒவ்வொரு பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று குளிர்கால கூட்டத்தொடருக்காக சட்டசபைக்கு வந்தபோது பாஜக உட்பட எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பதாகைகளுடன் அமர்ந்து கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவரை பேசவிடாமல் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், “யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசவில்லை. கருவுறுதல் விகிதம் குறித்து விளக்கவே முயன்றேன். என் வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காற்று தரக் குறியீடு என்றால் என்ன? - டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாடு எந்த வகையில் உள்ளது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.