பீகார்: வாழ்கை ஒரு நொடிப் பொழுதில் மாறக்கூடும், ஒரு விநாடியில் வாழ்க்கையையே திருப்பிப் போடும், அப்போது ஏழையாக இருப்பவர் பணக்காரராக மாறலாம் என்ற சினிமா வாக்கியங்களை மக்கள் கண்டு இருக்கலாம். கேட்டு இருக்கலாம். அப்போதெல்லாம் இது சினிமா வாக்கியம், பொது வாழ்க்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என பலர் சொல்லக் கேட்டும் இருக்கலாம்.
அதே சம்பவம் சாதாரண மனிதரின் வாழ்க்கையில் நடந்தால்.. அதுபோன்ற சுவாரஸ்யமான சம்பவம் பீகாரைச் சேர்ந்த இளைஞர் வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. பீகாரைச் சேர்ந்த ஹர்ஷ் ராஜ்புத் என்ற இளைஞர் தான் அவர். பட்டப்படிப்பு முடித்த ஹர்ஷ் ராஜ்புத், டிகிரி முடித்த சாதாரண இளைஞருக்கே உண்டான சினிமா ஹீரோவாக ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருந்துள்ளது.
ஹர்ஷ் ராஜ்புத்தின் தந்தை பீகார் போலீசில் உயர் அதிகாரிகளின் கார் டிரைவாக பணியாற்றி வந்த போதும், மகனின் ஆசைக்கு தடை விதிக்கவில்லை. தியேட்டர் ஆர்ட்டீஸ்டாக மாறிய ஹர்ஷ் ராஜ்புத், ஒரு புறம் சினிமா வாய்ப்புகளைத் தேடி அழைந்து திரிந்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
வாழ்க்கையின் ஒரு புள்ளி நம்மை மாற்றும் என்ற கருத்து போல, உலகத்தையே மாற்றிய கரோனா, ஹர்ஷ் ராஜ்புத்தின் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடியது. பார்த்துக் கொண்டு இருந்த வேலையும் கையை விட்டு போக, சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் நடிக்க வாய்ப்பு தேடி அழைய முடியாமலும் ஹர்ஷ் ராஜ்புத் தவித்து உள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கரோனா காலத்தில் இல்லத்தரசிகள் முதல் வேலை இழந்தவர்கள் வரை கையில் எடுத்த யூடியூப் தொழிலை ஹர்ஷ் ராஜ்புத்தும் தேர்வு செய்தார். சினிமா காட்சிகளை ஸ்பூஃப் செய்தும் காமெடி தொடர்பான வீடியோக்களையும் பதிவிட்டு வந்த ஹர்ஷ் ராஜ்புத், ஊரடங்கு தளர்ந்ததும் தனியார் நிருபர் அவதாரம் எடுத்துள்ளார்.
ஹர்ஷ் ராஜ்புத்தின் வீடியோக்கள் வைரலான நிலையில், அவரது வீடியோக்களை காணவே தனி ரசிகர் பட்டாளம் திரண்டனர். தற்போது யூடியூப் சேனலில் 33 லட்சத்திற்கும் மேலாகவும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளப் பக்கங்களில் 15 லட்சத்திற்கும் மேலாக சந்தாதாரர்களை ஹர்ஷ் ராஜ்புத் கொண்டுள்ளார்.
இதன் மூலம் மாதம் 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை ஹர்ஷ் ராஜ்புத் வருவாய் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மீண்டும் ஒருமுறை ஹர்ஷ் ராஜ்புத் வைரலாகி உள்ளார். அவர் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடி சொகுசு காரை வாங்கிய செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Rahul Gandhi Security Breach: ஒற்றுமை யாத்திரையில் ராகுலை கட்டிப் பிடித்த நபரால் பரபரப்பு!